$('#slide').cycle({
				fx:   'fade',
				delay:  -600
				});
			
செய்திகள்

----------

தொடர்புக்கு
மின்னஞ்சல்: singaravel@tamilresearch.in
தொலைபேசி: +91 9364557043
 
   
உத்தேச சட்ட வரைவு

 1. சங்கம் என்பது உலகத் தமிழாய்வுச் சங்கம், மதுரையைக் குறிக்கும்.

 2. சங்கம் தற்போது, மனை எண்.1099, 98வது குறுக்குத் தெரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வில்லாபுரம், மதுரை-11 என்ற முகவரியில் செயல்படும்.

 3. சங்கத்தின் நோக்கங்கள்:
  • தழிழ் மொழியின் தொன்மையையும், தழிழரின் வரலாற்றையும், நவீன விஞ்ஞான ஆய்வுகள் புறப்பொருள் சான்றுகளுடன் மிகப் பழைய மனித மண்டை ஒடுகள், எலும்புகள் இவற்றின் செறியூட்டப்பட்ட கரி சோதனை, மொழி அகழாய்வு, நாகரீக அகழாய்வு, தாய்வழி மரபணு சோதனை, விண்கோள் அறிவு, ஆன்மீக அறிவு, நிலவியல் அறிவு போன்றவை மூலம் காணல், உலகத் தொன்மையான தமிழ்ப்பண்பாடு பரிமாற்ற ஆய்வு க்கு வழி செய்தல்.
  • இயல், இசை, கூத்து என்ற முத்தமிழுடன் கணினி என்ற நான்காம் தமிழ் ஆய்ந்து, அவைகளுக்குத் தனித்தனி அமைப்புகள் அமைத்து அவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபடுதல்.
  • சங்கத்திற்கெனத் தனி புத்தக நூலகம், எலக்ட்ரானிக் புத்தக் (e-book) நூல்நிலையம் அமைத்து உலக பழைய, புதிய நூல்களையும் தொகுத்தல்.
  • சங்கத்திற்கென திங்கள் பத்திரிக்கை ஆய்வு மலர்கள், ஆண்டு மலர் மற்றும் சிறந்த உலகமொழிகளின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து நூல் வெளியிடல்.
  • சங்கத்திற்கென அச்சகம் நூல் வெளியீடு தொலைகாட்சி, இணையதளம் நிறுவுதல்.
  • தமிழ் வழிக் கல்விக்கான ஆக்கப் பணிகளில் ஈடுபடுதல், தமிழ் அகர முதலி, தமிழ்க் கலைக்களஞ்சியம் தமிழ் விஞ்ஞான அகராதி வெளியிடுதல்
  • தழிழைத் தமிழக அரசியலும், நீதிமன்றத்திலும் மத்திய அரசிலும் முழுமையாக ஆட்சிமொழி நிர்வாக மொழி ஆக்குதல் தமிழை உலகளாவிய மொழி ஆக்குதல்.
  • தமிழை ஐ.நா. சபையின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக ஆக்குதல்.
  • தழிழ் மருத்துவம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு, தமிழர் நாகரீகம் பேணி மேலும் வளர்ச்சி காணுதல், சுகாதாரம், சமூகப்பணிகள் ஆற்றுதல், உலகத் தமிழர்களின் எதிர்காலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்தி நடைமுறைப்படுத்துதல்.
  • சங்கம் மதுரையில் துவக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்து சென்னை, நாகர்கோவில், கோவை, திருச்சி என அதன் கிளைகளைத் தமிழக அனைத்து மாவட்டங்களிலும், இந்திய மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் அமைத்து உலகளாவிய அளவில் செயல்படுதல், உலகளாவிய அலவில் நிதி அமைப்பு அமைத்தல்.
  • சங்கம் உலகளாவிய அளனில் தமிழிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அமைத்து, கல்விப் பணிக்கான கிளைகளை உலக நாடுகளில் அமைத்தல்.
  • "யாதும் ஊரே - யாவரும் கேளிர்" என்னும் தமிழ் மூதுரையை இன்னும் சற்றே விளக்கத்துடன், "யாதும் ஊரே - யாவரும் குமரிக்கண்ட காலத்திய தமிழர்" என்ற உலகப்பார்வையை உலக மக்களிடம் உருவாக்கி உலகோர் அனைவரும் போர் அற்ற அமைதி வாழ்வு வாழ வழி காணுதல்.
  • தமிழர் ஐக்கிய உலகப் பாதுகாப்பு, தமிழர் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு, உலகத்தமிழர்கள் வங்கி போன்றவற்றை பேணுதல்.


 4. சங்கக் கூட்டங்களில் தமிழ் ஆர்வலர்கள் கல ந்து கொள்ளலாம். தொலைதூர தமிழார்வலர்கள் தபால், த ந்தி, ஃபேக்ஸ், இணையதளம் மூலம் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். சங்கத்தின் கூட்டம் தொடர் மாத ந் திரக் கூட்டமாக நடைபெறும்.

 5. பொதுக்குழு
  சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினராக விருப்பப்படுபவர் ஆயுள் கட்டணம் ரூ.1000/- சங்கத்தில் செலுத்தி விண்ணப்ப மணுக்கள் தாக்கல் செய்ய அவை சங்க செயற்குழு கூட்டத்தில் "யாதும் ஊரே யாவரரும் குமரிகண்ட காலத்தியத் தழிழரே" என்ற சங்க கோட்பாடின்படி உலகத் தமிழார்வலர்கள் யாவரும் நாடு மொழி சமயம், இனவேறுபாடின்றி பதினெட்டு வயத்துக்கும் மேற்பட்ட இருபாலரும் சங்கத்தில் ஆயுள் உறுப்பினராக புரவலராக சேரலாம். பொதுக்குழு உறுப்பினர் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.

 6. சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்களாய் இருத்தல் வேண்டும்.

 7. புரவலர்கள்
  சங்கத்திற்கு குறைந்தது ரூ.10,000/- அல்லது அதற்கு மேல் நிதி வழங்குபவர்கள் சங்கத்திற்குப் புரவலர்கள் ஆவர். புரவலர்கள் கூடுதலாகக் கொடுக்கும் நங்கொடைத் தொகைகள் அவ்வப்போது அவரவர் வைப்புத் தொகைக் கணக்கில் சேர்க்கப்படும். அந்த வைப்புத் தொகைகளில் இருந்து வங்கியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையை மட்டுமே, சங்கப் பணிகளுக்காகச் செலவழிக்கப்படும்.

 8. சங்க நிதி
  • சங்கத்தின் புரவலர்கள் வழங்கும் அறக்கட்டளைத் தொகைகள்.
  • சங்கப் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆயுள் கட்டணத் தொகைகள்.
  • தமிழ் ஆர்வலர்கள், சங்க உறுப்பிபனர்கள் சங்கத்திற்கும் வழங்கும் நங்கொடைகள்.
  • சங்கப் பத்திரிக்கை, மலர்கள், நூல் வெளியீடுகள் மற்றும் தொலைக்காட்சி இணையதளம் மூலம் கிடைக்கும் வருவாய்த் தொகைகள்.
  • சங்கத்திற்கு நங்கொடையாக சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகை வருவாய்த் தொகைகள்.
  • சங்கத்தின் திறந்த வெளிப் பல்கலைக்கழக வருவாய்த் தொகைகள்.
  • சங்கம் தோற்றுவிக்கும் நிதி அமைப்பின் வருவாய்த் தொகைகள்.
  • சங்கம் நடத்தும் அச்சகம், வெளியீடு, ஆய்வு மாநாடுகள், ஆண்டு மாநாடுகள் வழியிலான வருவாய்த் தொகைகள்.
  • அறக்கட்டளைகள் வழங்கும் நிதிகள், மாநில அரசுகள், இந்திய அரசு, வெளிநாட்டு அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை, பல்கலைக்கழகங்கள், மொழி அமைப்புகள் வழங்கும் நிதிகள்


 9. சங்கத்தின் நிர்வாகிகளாக ஒரு தலைவர், ஐந்து துணைத் தலைவர்கள், ஒரு மேலாண்மைச் செயலாளர் (Secretary General), இரண்டு செயலாளர்கள், மூன்று இணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் இருப்பர். நிர்வாகத்திற்கு உறுதுணையாக செயற்குழு உறுப்பினர்கள் 30பேர் வரை இருப்பர். கௌரவ ஆலோசகர்களாக ஐந்து பேர் வரை நியமிக்கப்படுவர்.