$('#slide').cycle({
				fx:      'fade',
				delay:   -600
				});
			
செய்திகள்

----------

தொடர்புக்கு
மின்னஞ்சல்: singaravel@tamilresearch.in
தொலைபேசி: +91 9364557043
 
    
உலகத் தமிழாய்வுச் சங்கத்தின் வரலாறு

உலகத் தமிழாய்வுச் சங்கம் மதுரை காமராஜர் சாலை, சாத்தூர் நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் பன்மொழிப் பெருங்கடல் சாத்தூர் சேகரனார் சிறப்புரையாற்ற 'தேமதுர தமிழோசை' தமிழாலயன், பி.சிங்காரவேல், கு.அமிர்தசேகரன் ஆகியோர் ஆலோசித்து 2005ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தொடங்கப்பட்டது. அத்திருமண மண்டபத்தில் தொடர்ந்து மேலும் சில மாதங்கள் ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் சாத்தூர் சேகரனார் சிறப்புரையாற்ற சங்க மாதந்திர கூட்டங்கள் நடைபெற்றன. சங்கத்தின் 9ஆவது மாதாந்திர தொடர் கூட்டம் முதல் 8.7.2012 நாளய 75வது தொடர் கூட்டம், மதுரை கீழமாசிவீதி, பி.1. காவல் நிலையத்தெரு,நாடார் மகாஜன சங்கம் மேன்சன் பெருமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சங்கத்தின் 14-7-2007 ஆம் நாள் நடந்த 15ஆவது மாதந்திர தொடர் கூட்டத்தில், உலகத் தமிழாய்வுச் சங்கத்தின் தற்கால நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வந்த 34 தமிழ் ஆர்வலர்களால் நியமனம் செய்யப்பட்டார்கள்.