$('#slide').cycle({
				fx:   'fade',
				delay:  -600
				});
			
செய்திகள்

----------

தொடர்புக்கு
மின்னஞ்சல்: singaravel@tamilresearch.in
தொலைபேசி: +91 9364557043
 
   
உலகத் தமிழாய்வச் சங்க முதல் மாநாட்டுத் தீர்மானங்கள்
 1. "உலக ஆதித்தாய் குமரிக்கண்டத்தாய்" என்ற கோட்பாட்டை உலகத் தமிழறிஞர்கள் விஞ்ஞான பூர்வமாக ஆய்வுகள் செய்து ஆய்வறிக்கைகள் அளித்திடல் வேண்டும்.

 2. உலக மொழியியல் வல்லுநர்கள் நடு நிலையுடன் உலக மொழிகள் அனைத்தையும் அகழாய்வு செய்து தமிழின் வேர்ச் சொற்கள் உலக மொழிகள் அனைத்திலும் இருப்பது கண்டு உலகின் முதன் மொழி தமிழே என்பதை நிரூபிக்க வேண்டும்.

 3. மொழிகள் அகழாய்வு போல், உலக நாகரிங்களின் அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக நாகரிங்களின் அகழாய்வு மேற் கொண்டு குமரிக்கண்ட(லெமூரிய) நாகரிகமே உலகின் முதலும் சிறந்ததுமான நாகரிகம் என்பதை ஆய்வுகள் மூலம் தமிழறிஞர்கள் நிரூபிக்க வேண்டும்.

 4. "உலகின் முதல் இசை தமிழசையே" என்ற கோட்பாட்டை 1910களிலேயே இராவ் சாஹிப் மு.ஆபிரகாம் பண்டிதர் தனது 1130 பக்க "கருணாமிர்தசாகரம" ஆய்வு நூலில் நிரூபித்து அறிவித்த உண்மைகளை உலகோர் அனைவரும் அறிய உலக மொழிகளில் மொழிபெயர்த்துப் பரப்புதல் வேண்டும்.

 5. வள்ளுவன் தன்னை உலகிற்குக் தந்து வான் புகழ் கொண்ட திருக்குறளை இந்திய தேசிய நூலாகவும், ஐ.நா.சபை உலகப் பொதுமறையாகவும் ஏற்க ஆவண செய்ய வேண்டும்.

 6. தமிழை தமிழக அரசின் முழுமையான நிர்வாக மொழியாக்கி, மத்திய அரசின் நிர்வாக மொழியுமாக்கி, ஐ.நா. சபையில் உள்ள நிர்வாக மொழிகளில் தமிழையும் ஒன்றாக ஆக்க ஆவண செய்ய வேண்டும்.

 7. ஏற்கனவே உள்ள தமிழனின் அகப்பொருள் சான்றுகளுடன் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளான 10,000 ஆண்டுகள் பழைமையான பூம்புகார், கெம்பேகுடா, துவாரகை சிந்துவெளி நாகரிகங்கள் மற்றும் இந்துப் பெருங்கடல் அகழாய்வு, மொழிகள் அகழாய்வு, நாகரிங்கள் அகழாய்வு மற்றும் தாய்வழி மரபணுச்சோதனைகள் துணை கொண்டு தோராயமாக தமிழனின் தொன்மையை தோராயமாக 1,50,000 ஆண்டுகள் காலத்திற்கு ஆய்வு செய்திட வேண்டும்.

 8. கடைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரையின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து, உண்மை வரலாறு வெளியிடப்பட வேண்டும்.

 9. பூம்புகார்களில் இந்திர விழா நடந்தது போல, மதுரை தமுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ்த்தாய்க்கு ஆண்டுதோறும் தமுக்கம் மைதானத்தில் சிறப்பான விழா நடத்த வேண்டும்.

 10. மதுரை மையப்பகுதியில் ஆங்கிலேய நிர்வாகி "மாரட்" பெயரில், நாற்புற அகழிகள் மூடப்பட்டு கீழமாரட் வீதி, மேலமாரட் வீதி, தெற்குமாரட் வீதி, வடக்குமாரட் வீதி என்று வழங்கி வருபவை இனி அழகு தமிழில் கீழ அகழி வீதி, மேல அகழி வீதி, தெற்கு அகழி வீதி, வடக்கு அகழி வீதி என்று இனி அழைக்கப்படல் வேண்டும்.

 11. மதுரைத் தொன்மை வாய்ந்த பாண்டிய மன்னர்களுள் நீதிக்குப் பெயர் பெற்ற பாண்டியன் நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி, பத்தினித்தெய்வம் கண்ணகி ஆகிய மூவருக்கும், நீதிக்கு எடுத்துக்காட்டாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் சிலைகள் அமைத்து வரலற்றைப் பேண வேண்டும்.

 12. மதுரை உலகத்தமிழ் மாநாட்டின் போது, மதுரை தமுக்கம் பகுதியில் மதுரைத் தமிழ் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், இனியும் காலதாமதம் இல்லாது கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு விரைவில் மதுரைத் தமிழ்ச் சங்கம் செயல்பட தமிழக அரசும் செம்மொழி அமைப்பும், மத்திய அரசும் நிதிகள் ஒதுக்கிடவேண்டும்.

 13. மதுரைப் பாண்டிய மன்னர்களின் கோட்டை எச்சமான மதுரை மேலவாசல் கோட்டையை புராதானச் சின்னமாகப் பேண வேண்டும்.

 14. "மொழி ஞாயிறு" தேவ நேயப் பாவாணர் பெயரில் மதுரையில் உள்ள மணி மண்டபத்திற்கு ஆர்வமுள்ள தமிழறிஞர்களை குழுவாகக் கொண்ட நிர்வாகத்தை அமைத்து, ஆண்டு முழுவதும் அங்கு தமிழ் நிகழ்ச்சிகள் மாதந்தோறும் சிறப்பாக நடத்திடல் வேண்டும்.

 15. மதுரைப் பாண்டியர்கள் காலத்தில் இருந்த "சங்கப்பலகை" யை மீண்டும் உயிர்பித்து, உலக தமிழறிஞர்கள் அனைவரும் மதுரையில் சங்கமித்து, தமது உயரிய கருத்துக்களை ஆய்வு செய்து அளிக்க தமிழறிஞர் குழாம் ஆய்வு செய்து அரங்கேற்றம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.

 16. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழ் மூதுரையை நடைமுறைப்ப்டுத்தி, உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போர் அற்று அமைதியாக வாழ வழி காண வேண்டும்.